ஆத்ம புண்ணிய தியானம்

பர உபகாரமே புண்ணியம்
பாவமே பர பீடனம்
இறை தியானமே ஆத்ம புண்ணியம்
பூரண ஆத்ம புண்ணியமே இறை யோகம்
பூரண இறை யோகமே ஆத்ம ஒளி
பூரண ஆத்ம ஒளியே இறைநிலை
பூரண இறைநிலையே எந்நாளும் முடிவில்லா ஒளி ஜென்மம்

"ஆன்மீக மகா குரு "

ஆன்மீக அறிவு

ஆன்மீக அறிவு என்றால் என்ன?
காலையில், மலை மேல் ஏறி உதித்தெழும்பிய சூரியனை பார்,
அதிலிருந்து வெளி வரும் ஒளியை பார், இதன் தொடக்கம் என்ன?
என்று முதல் இது நடக்கிறது? தெரியாது.
தெரியாத தொடக்கம் முதலே குறைவில்லாமல் வந்து இறங்கும் ஒளி,
இந்த மாயை என்ன?
இந்த மகிமை என்ன?
இந்த மகத்துவம் என்ன?
இந்த அதிசயம் என்ன?
இந்த மகா பிரமாண்ட அமிர்த ஒளிக்கும், ஒளி வெளிவிடும் உறைவிடத்திற்கும்
ஆதார விதிமூலம் ஆனவரை மனதால் நினைத்து இன்பம் அடைவதே ஆன்மீக அறிவு.

"ஆன்மீக மகா குரு "

பக்தி

சூரியோதயத்திலே இருளும், நட்சத்திரமுமின்றி சூரிய பிரகாசம்
மாத்திரம் (மட்டும்) கண்ட கண் போல, மனமானது
இன்ப துன்பங்களையும், ஆசா பாசங்களையும் சுக துக்கங்களையும்
கடந்து இறைவனுள் மட்டுமே நிலைப்பது பக்தி ஆகும் .

"ஆன்மீக மகா குரு "
முன்னோர் கூற்று

“பக்தியால் உள்ளே பரிந்து அரனைத் தான் நோக்கில்
முக்திக்கு மூலம் அது”
இது நம் பூர்வீக மகான்கள் கூற்று

புண்ணியம்

பிறருக்கோ பிற உயிர்களுக்கோ தீமை விளைவிக்காத படி நாம் செய்யும் நற்செயல்களே புண்ணியம் ஆகும்

" ஆன்மீக மகா குரு "

பாவம்

பிறருக்கோ பிற உயிர்களுக்கோ தீமை விளைவிக்கும் படி நாம் செய்யும் செயல்களே பாவம் ஆகும்

" ஆன்மீக மகா குரு "

பாவத்துவம்

1, பூர்வ பாவம் (பாரம்பரிய பாவம்), (இரத்த வழி பாவத்துவம்)
2, கர்ம பாவம்
3, ஜென்ம பாவம் (கர்மா, கர்ம வினை)

பூர்வ பாவம்

நம் முன்னோர்கள் செய்த பாவ செயல்கள் மூலம் பாரம் பரியத்தில் தொடர்ந்து வரும் பாவம் பூர்வபாவம் ஆகும்,
நண்பர் ஒருவரின் குடும்பத்தில் நடந்த நிகழ்வு, அவருடைய தாத்தாவிற்கு 3 ஏக்கர் தென்னை தோட்டம் இருந்தது, தோட்டத்தின் கீழ் பகுதியில் ஓடையின் கரையோரம் 1 ஏக்கர் புறம்போக்கு நிலமும் இருந்ததுஅந்த புறம்போக்கு நிலத்தில் 20 குடிசை வீடுகள் இருந்தன. அவர் தாத்தா அந்த புறம்போக்கு நிலத்தை பட்ட போட்டு வாங்கி விட்டு 20 குடிசை வீட்டாரையும்அவ்விடத்தை விட்டு வெளியேற சொன்னார், அவர்கள் அவ்விடம் விட்டு போகாததால் ஒரு நாள் இரவில் அந்த 20 குடிசைகளுக்கு தீ வைத்தார் அதில் சிலர் இறந்தார்கள்,அப்படி அவ்விடத்தை கைவச படுதினார். இவருடைய தகப்பனார் காலத்தில் அந்த இடம் முழுவதும் விற்று விட்டார்கள், தற்போது இவர் இவருடைய இரண்டு மகள்,ஒரு மகன் மற்றும் மனைவி மொத்தமாக 5 பேரும் புறம் போக்கு நிலத்தில் வசித்து வருவதாக சொன்னார்.

“இதுவே பூர்வ பாவம் ஆகும்”.

கர்ம பாவம்

நாம் செய்யும் செயல்களால் உண்டாகும் பாவம் கர்ம பாவம் ஆகும்.

ஜென்ம பாவம் (கர்மா, கர்ம வினை)

நாம் நம் முன் ஜென்மத்தில் செய்யப்பட்டதாக கருதப்படும் பாவம் ஜென்ம பாவம் ஆகும் (ஜென்மனால் நாம் பிறக்கும் போது அதை கொண்டு பிறப்பது ஆகும்)

கடவுள் (இறைவன்)

‘பூமி புண்ணியமயமாய் நிறைந்துள்ளது’, ‘பூமி முழுவதும் மழையால் செழிக்கிறது’
‘இரவும் பகலும், ஒளியும் வெளிச்சமும், பிரகாசமும் பூமி முழுவதும் வந்து இறங்குகிறது’
இவை என்னாலோ உங்களாலோ நம் முன்னோர்களாலோ நம் ஆதி பூர்வீகராலோ உண்டானது அல்ல .
இந்த நன்மைகளுக்கும், இந்த நன்மைகளை உள்ளடக்கிய பிரபஞ்சத்திற்கு உரிமையாளரும்
இப் பிரபஞ்ச படைப்பிற்கு ஆதார விதி மூலம் ஆனவருமே கடவுள் ஆவார்.

"ஆன்மீக மகா குரு"
தொடர்புக்கு