எங்கள் நோக்கம்

” ஸர்வத்துக்கும் மேலான, நிலையான, நிரந்தரமான, நித்தியத்துவமான இன்பம் பெறுதல் “

ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமானவற்றில் இன்பம் அடைகின்றனர். 'சிலர் பெரும் பணம் தேடி, சந்தோஷம் அடைகின்றனர், சிலர் வீடு, பூமி, சொத்துக்களென செல்வ செழிப்பால் சந்தோஷம் அடைகின்றனர், சிலர் அதிகாரம் உள்ள இடத்தில் அமர்ந்து அதன் மூலம் செய்ய முடியும் ஆளுமை கொன்டு இன்பம் அடைகின்றனர், சிலர் பணியாளர்கள் மூலமும் உதவியாளர்கள் மூலமும் இன்பம் அடைகின்றனர், சிலர் சரீர ஆரோக்கியத்தால் சந்தோஷம் அடைகின்றனர், சிலர் போதைகளால் சந்தோஷம் அடைகின்றனர், சிலர் சரீர ரூபத்தாலும் , சரீர ரூப அழகாலும் சந்தோஷம் அடைகின்றனர், சிலர் வித விதமான உணவுகளால் சந்தோஷம் அடைகின்றனர், சிலர் மனைவி மக்கள் சுற்றம் உறவுகள் என சந்தோஷம் அடைகின்றனர்,

ஆனால்

இவைகள் எல்லாவற்றையும் தாண்டி ,இறைவன் மேல் மனதளவில் ஒரு இறை உணர்வு (இறைவன் மேல் அன்பு) உண்டாகி, அதன் மூலம் இறைவனை நினைத்து மனதால் ஆனந்தம் கொள்வது ஸர்வ இன்பத்திற்கும் மேலானது ஆகும்.